2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்.

உள்ளூர்December 23, 2025 · 8 months முன்2
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், நேற்று (22) பிற்பகல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்தார்.

இந்த விஜயம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக எஸ். ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.