பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பிடியாணை

கொழும்பு கோட்டை நீதவான், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை பிறப்பித்தார்.
போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை நிறுத்தியமையும், புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளை செய்யவிடாது இடையூறு விளைவித்தமையும் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், இன்றைய வழக்கு விசாரணையின் போது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. ஆகையால் நீதவான் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.




