2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி!

உள்ளூர்March 10, 2026 · 5 months முன்2
கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி!

ஆசியாவில் இன்று (10) அதிகாலை நடைபெற்ற வர்த்தகத்தில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன.

பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெயின் விலை சுமார் 8.5% குறைந்து, ஒரு பீப்பாய் $92.50 (£68.85) ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்காவிலும் கச்சா எண்ணெய் விலை சுமார் 9% சரிந்து ஒரு பீப்பாய் $88.60 ஆகக் குறைந்தது. 

இருப்பினும், மோதல் தொடங்கிய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த விலைகள் இன்னும் சுமார் 30% அதிகமாகவே உள்ளன. 

போர் “மிக விரைவில்” முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்தே இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

ஆரம்பகட்ட வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததன் காரணமாக ஆசிய சந்தைகள் ஊக்கமடைந்துள்ளதாகத் தெரிகிறது. 

ஜப்பானின் நிக்கேய் 225 (Nikkei 225) குறியீடு 2.8% உயர்ந்ததுடன், தென் கொரியாவின் கோஸ்பி (Kospi) பங்குச்சந்தை 5%க்கும் அதிகமாக உயர்ந்தது. 

ஆசிய பிராந்தியத்திலுள்ள பல நாடுகள் வளைகுடா நாடுகளின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருப்பதால், கச்சா எண்ணெய் விலையேற்றத்தினால் ஆசிய சந்தைக் குறியீடுகள் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.