2026 October 9, Friday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 33° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பேருந்தில் சிக்கிய பாடசாலை மாணவி உயிரிழப்பு

உள்ளூர்April 11, 2026 · 6 months முன்3
பேருந்தில் சிக்கிய பாடசாலை மாணவி உயிரிழப்பு

மட்டக்குளியில் பேருந்து ஒன்றில் மோதிய விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். 

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேந்தல தொட்டுபொல வீதியில் நேற்று (10) நண்பகல் பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பாடசாலை மாணவி ஒருவர், அதே பேருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். 

விபத்தில் படுகாயமடைந்த மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவி மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடையவர் ஆவார். 

சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்