2026 October 24, Saturday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் இடமாற்றம் : நாளை புதிய நீதவான் நியமனம்!

உள்ளூர்January 4, 2026 · 10 months முன்4
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் இடமாற்றம்  : நாளை புதிய நீதவான் நியமனம்!

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

மேலும் சம்மாந்துறை நீதிமன்ற புதிய நீதிவானாக நூர்டீன் முஹம்மட் சர்ஜன் நாளை நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் பதவியேற்கவுள்ளார்.

கடந்த காலங்களில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவானாக செயற்பட்ட இவரது காலத்தில் நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஏற்பட்டிருந்ததுடன் நீதிமன்ற களஞ்சியசாலையில் இருந்த சான்றுப் பொருள்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அங்கு கடமையாற்றிய பதில் பதிவாளர் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மேலும் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்து நீதிச்சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை 2026.1.2ஆம் திகதியன்று இடமாற்றம் செய்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த குறித்த நீதிவான் மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணம் செய்துள்ளதுடன் களுவாஞ்சிக்குடி, சம்மாந்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதிவானாக கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.