2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மத்திய கிழக்கில் பதற்றம் குறைகிறதா? கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி!

உலகம்July 27, 2026 · 3 weeks முன்3
மத்திய கிழக்கில் பதற்றம் குறைகிறதா? கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (27) 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

இரண்டு வாரங்களாக ஈரான் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடைநிறுத்தியுள்ளார். 

இதனால் மத்திய கிழக்கில் மோதலைக் குறைக்கக்கூடிய ஒரு தூதரகத் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையை அடுத்து மசகு எண்ணெய் விலையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

அதன்படி பிரெண்ட் ரக பீப்பாய் கச்சா எண்ணெய் இன்று அதிகாலை 5.77 சதவீதம் வீழ்ச்சியடைந்து 92.02 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

அதேநேரம், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 5.50 சதவீதம் வீழ்ச்சியடைந்து 84.40 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது. 

அத்துடன் மேர்பன் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 10.12 சதவீதம் வீழ்ச்சியடைந்து 97.05 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.