2026 October 20, Tuesday 🌧️ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 23° ⛈️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கைக்கு எரிபொருள் வழங்க ரஷ்யா இணக்கம்

உள்ளூர்March 26, 2026 · 7 months முன்6
இலங்கைக்கு  எரிபொருள் வழங்க ரஷ்யா இணக்கம்

இலங்கைக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தலைமையிலான தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .

இலங்கையின் தற்போதைய எரிபொருள் தேவையை கருத்திற்கொண்டு, தட்டுப்பாடின்றி சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை வழங்குவதற்கு ரஷ்ய பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் மாத்திரமன்றி, இலங்கையின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் ரஷ்யா தனது ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.