2026 October 10, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இன்று நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி விலை அதிகரிப்பு!

உள்ளூர்May 7, 2026 · 5 months முன்6
இன்று நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி விலை அதிகரிப்பு!

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் செயற்பாட்டுச் செலவுகள் உயர்வடைந்துள்ளதைக் கருத்திற் கொண்டு, உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலைகளை திருத்தியமைக்க தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விலை மாற்றம் இன்று (07) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

அதன்படி ,சோற்றுப்பொதி ,பிரியாணி மற்றும் நாசி கோரெங் 25 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளன.மேலும் பால் தேநீர் 10 ரூபாவினாலும் தேநீர் 5 ரூபாவினாலும் சிற்றுண்டிகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன.

இதேவேளை முட்டை ரொட்டி மற்றும் பராட்டா உள்ளிட்ட உணவு வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என ஹர்ஷன ருக்ஷான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.