2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாடு திரும்பினார் பிரதமர் ஹரிணி அமரசூரிய

உள்ளூர்January 23, 2026 · 9 months முன்5
நாடு திரும்பினார் பிரதமர் ஹரிணி அமரசூரிய

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற 2026 உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையிலான தூதுக்குழுவினர், 4 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (ஜனவரி 23) காலை நாடு திரும்பினர்.

பிரதமர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசாட்சுகு அசகாவா ஆகியோருடன் நிதி ஸ்திரத்தன்மை குறித்து கலந்துரையாடினார்.

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிர்வாகி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

‘உலகப் பெண்கள் டாவோஸ் நிகழ்ச்சி நிரல் 2026’ இல் பிரதமர் சிறப்புரையாற்றினார்.

வளர்ந்து வரும் சந்தைகளில் வேலைவாய்ப்பு நெருக்கடி மற்றும் உலகளாவிய சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்த உயர்மட்டக் குழு விவாதங்களிலும் அவர் பங்கேற்றார்.

AP Moller-Maersk போன்ற சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சுவிட்சர்லாந்து வர்த்தக சமூகத்துடன் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தில் தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் பங்கேற்றனர்.

இந்த இராஜதந்திர விஜயமானது இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கான சர்வதேச ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்களுக்கு இலங்கை பிரதமரின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.