2026 October 24, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஜனாதிபதியின் செயலாளருக்கும் பிரான்ஸ் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

உள்ளூர்December 10, 2025 · 11 months முன்5
ஜனாதிபதியின் செயலாளருக்கும் பிரான்ஸ் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Remi Lambert ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் ஆதரவளிக்கும் என்றும், இதற்காக எதிர்காலத்தில் நிபுணர்கள் குழுவை நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் செயலாளரிடம் பிரான்ஸ் தூதுவர் உறுதியளித்தார்.

பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தலைவர் Matthieu John இந்நிகழ்வில் பங்கேற்றார்.