2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஜனாதிபதி செயலாளர் – ரஷ்ய தூதுவர் சந்திப்பு

உள்ளூர்February 25, 2026 · 6 months முன்1
ஜனாதிபதி செயலாளர் – ரஷ்ய தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், சுற்றுலா, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரதான துறைகளிலான ஒத்துழைப்பு தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ரஷ்யக் கூட்டமைப்பு தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் ஜேர்மன் பெடோரோவ் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.