2026 October 17, Saturday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 30° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்

உள்ளூர்February 24, 2026 · 8 months முன்3
தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்

இந்த வருட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

“தமக்கென ஓரிடம் அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ் 2026 தேசிய வீடமைப்புத் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் இந்த வீடமைப்பு நிர்மாணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுசில் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

”இந்த வருடம் 2026 திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் சுமார் 25,000 வீடுகள் நேரடி உதவியின் கீழேயே நிர்மாணிக்கப்படவுள்ளன.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சுமார் 10,000 குடும்பங்களுக்கு வீடமைப்பு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதற்காக 10,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய் வீதம் மானியம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது ஒருவரது சொந்த வீட்டை அமைத்துக் கொள்வதற்காக வழங்கப்படும் மீள அறவிடப்படாத ஒரு நிதியுதவியாகும்.

பெப்ரவரி 25ஆம் திகதி 13 மாவட்டங்களில் 1,500 குடும்பங்களுக்கு 1,500 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 1,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கும் பணிகள் ஆரம்பமாகும்.” என்றார்.