2026 October 19, Monday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட மனு நிராகரிப்பு!

உள்ளூர்July 20, 2026 · 3 months முன்5
முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட மனு நிராகரிப்பு!

பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க, அத்துடன் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர். 

இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளி ‘வொரன்ட்’ அதிகாரியான சாந்த ஜயதிலக என்பவரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 

எவ்வாறாயினும், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.