2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

டயகம பஸ் விபத்தில் ஒருவர் பலி!

உள்ளூர்April 29, 2026 · 4 months முன்2
டயகம பஸ் விபத்தில் ஒருவர் பலி!

ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் பட்டல்கல பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 22 பேர் டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்றே, பிற்பகல் 3 மணியளவில் டிக்கோயா, பட்டல்கல பகுதியில் வைத்து எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.