2026 October 31, Saturday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 32° ⛅ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

விரைவில் வெளிவரும் புதிய வரிச் சட்டமூலம்

உள்ளூர்February 10, 2026 · 9 months முன்4
விரைவில்  வெளிவரும் புதிய வரிச் சட்டமூலம்

வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட அரச நிதி ஒருங்கிணைப்புக்கு வழியமைத்து, வரி முறைமையை மேம்படுத்துவதற்காக, முன்மொழியப்பட்ட வரிச் சீர்திருத்தங்களை உள்ளடக்கி 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு 2025-05-19 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, திருத்தப்பட்ட சட்டமூலம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்குச் சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப்பெற்றுள்ளது. 

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், பின்னர் அங்கீகாரத்துக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.