2026 October 12, Monday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

போகம்பரை சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறைச்சாலை! வர்த்தமானி வெளியீடு

உள்ளூர்July 9, 2026 · 3 months முன்6
போகம்பரை சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறைச்சாலை! வர்த்தமானி வெளியீடு

பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார். 

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் 54 ஆம் உறுப்புரையின், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கையொப்பத்துடன் நேற்று முன்தினம் (07) மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது. 

இது குறித்து ‘அத தெரண’ செய்திச் சேவை வினவிய போது பதிலளித்த நீதி அமைச்சு, மூடப்பட்டுள்ள மஹமோதர வைத்தியசாலையின் ஒரு பகுதியில் தற்காலிக அடிப்படையில் இந்தச் சிறைச்சாலை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தது.