2026 October 27, Tuesday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டங்கள் அவசியம் – நளிந்த

உள்ளூர்January 22, 2026 · 9 months முன்5
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டங்கள் அவசியம் – நளிந்த

அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில், மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆயுர்வேத உற்பத்திகள் மற்றும் சில சிகிச்சை முறைகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை, நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்த முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், மக்கள் பாதிக்கப்படும் வகையில் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சட்டம் நாட்டில் இல்லை என்றும், அவற்றை இயற்றுவதன் மூலம் இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.