2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

நீர்கொழும்பு களப்பில் கடற்படை அதிரடி!

உள்ளூர்May 13, 2026 · 3 months முன்0
நீர்கொழும்பு களப்பில் கடற்படை அதிரடி!

நீர்கொழும்பு களப்புப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 941 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள ‘இலங்கை கடற்படைக் கப்பல் கெளனி’ (SLNS Kelani) நிறுவனத்தின் சிப்பாய்கள் நீர்கொழும்பு களப்பு பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகு ஒன்றினை வழிமறித்து சோதனையிட்டனர்.

குறித்த டிங்கி படகினை சோதனையிட்ட போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 மூட்டைகளை கடற்படையினர் கண்டெடுத்தனர். அந்த மூட்டைகளை பிரித்து சோதனையிட்ட போது, அவற்றில் 941 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கடத்தி வரப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, பீடி இலைகள் அடங்கிய மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கி படகு மற்றும் அதிலிருந்த இரண்டு சந்தேக நபர்களையும் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

சட்டவிரோத கடத்தலின் ஊடாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட இந்த பீடி இலைகள் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் நீர்கொழும்பு சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கடல் மார்க்கமாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.