2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாமல் ராஜபக்ச வழக்கு ஒக்டோபர் 29-க்கு ஒத்திவைப்பு!

உள்ளூர்July 30, 2026 · 2 months முன்5
நாமல் ராஜபக்ச வழக்கு ஒக்டோபர் 29-க்கு ஒத்திவைப்பு!

நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இரு தனியார் வங்கிக் கணக்குகள் தொடர்பான மேலதிகத் தகவல்களைப் பெறுவதற்கு அனுமதி கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த வேண்டுகோளை நீதவான் அசங்க எஸ்.போதாரகம ஏற்றுக்கொண்டார்.

இன்றையதினம் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.