2026 September 24, Thursday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை, சுயாதீனம் குறித்து அமைச்சர்அனோஜனை காப்பாற்ற அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும் – ITAKசபாநாயகர் முன்னிலையில் ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம்உபாதையால் ஹசரங்க அணியிலிருந்து விலகல்மூன்று நாள் அமெரிக்க விஜயத்தை தொடங்கிய ஜி ஜின்பிங்அனோஜனை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைநீதித்துறை திருத்தம் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்இலங்கைக்கு நேரடி தாக்கம் இல்லை; மழை பாதிப்பு தொடரும்

நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை, சுயாதீனம் குறித்து அமைச்சர்

உள்ளூர்September 24, 2026 · 2 hours முன்3
நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை, சுயாதீனம் குறித்து அமைச்சர்

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் என்பன தொடர்பான பாராளுமன்ற விவாதம் சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமானது. 

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார குறித்த சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த விவாதம் தொடங்கியது. 

குறித்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களின் ஆணைக்கு ஏற்ப செயல்படுவதாகத் தெரிவித்தார். 

“எமது கொள்கைப் பிரகடனமான ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதன் 200 ஆம் பக்கத்தை எடுத்துப் பார்த்தால், நீதித்துறை மற்றும் சட்டக் கட்டமைப்பு தொடர்பில் எமது அடிப்படைக் கொள்கைகளாக எதனைக் குறிப்பிட்டுள்ளோம்? முதலாவது, சட்டத்தின் முன் சமமான மற்றும் நியாயமான பாதுகாப்பு; இரண்டாவது, வெளிப்படைத்தன்மை, செயல்திறன், சுயாதீனம் மற்றும் மக்கள் நம்பிக்கை. இந்த அடிப்படைக் கொள்கைகளின் மீதே நீதித்துறை கட்டமைப்பை இயக்குவோம் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம். அந்த வாக்குறுதியின் ஒரு பகுதியை நிறைவேற்றும் நாளே இன்றைய நாள்; அதுவே இந்த இரு சட்டமூலங்களுமாகும்.” என்றார்.