2026 October 14, Wednesday 🌧️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 24° ⛈️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நிலக்கரி ஊழலில் பல கோடி ரூபாய் இழப்பு!

உள்ளூர்April 9, 2026 · 6 months முன்4
நிலக்கரி ஊழலில் பல கோடி ரூபாய் இழப்பு!

நிலக்கரி ஊழல் காரணமாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள மொத்த நஷ்டம் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினரால் இன்று நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டும் நிலக்கரி ஊழலால் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் இந்த இழப்புகளை கணக்கிட்டு ஆராயும் போது, மொத்த நஷ்டம் 10,000 கோடி ரூபாயைத் தாண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, கூடுதல் நிலக்கரிக்காக மட்டும் 220 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

நிலக்கரி ஏற்றி வந்த 9 கப்பல்கள் தொடர்பான பிரச்சினையால் 141 மில்லியன் யூனிட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளது. இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய டீசலைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு யூனிட் மின்சாரத்தை டீசல் மூலம் உற்பத்தி செய்ய 125 ரூபாய் செலவாகிறது. அதன்படி, 141 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்ய 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மேலதிக செலவு ஏற்படும் என அவர் விளக்கமளித்தார்.