2026 October 12, Monday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° ⛈️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கையில் மீண்டும் தட்டம்மைத் தொற்று..

உள்ளூர்April 24, 2026 · 6 months முன்2
இலங்கையில் மீண்டும் தட்டம்மைத் தொற்று..

இலங்கையில் ஏற்கனவே ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தட்டம்மை நோய் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் கொழும்பு மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களுக்கு இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடு தழுவிய ரீதியில் மீண்டும் பரவக்கூடிய அபாயம் குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

தட்டம்மை தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாத அல்லது ஒரு கட்ட தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்ட பிள்ளைகளுக்கு, தாமதமின்றி முழுமையான தடுப்பூசி அட்டவணையை பூர்த்தி செய்யுமாறு பெற்றோர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார நிறுவனத்தினால் 2019ஆம் ஆண்டு இலங்கை தட்டம்மையற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.

எனினும், 2023ஆம் ஆண்டு முதல் சில பகுதிகளில் ஆங்காங்கே இத்தொற்று பதிவாகி வருகின்றன. கடந்த 2025 ஜனவரி முதல் இந்நோய் பதிவாகாத நிலையில், தற்போது மீண்டும் இரண்டு தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.

தொற்றுக்குள்ளான ஒருவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் இந்தியாவில் ஆய்வு செய்யப்பட்டதில், இந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குள் ஊடுருவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று குறித்து கருத்து தெரிவித்த தொற்றுநோயியல் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி மருத்துவர் அத்துல லியனபத்திரண, தட்டம்மை நோயானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்கச் செய்து, ஏனைய தொற்றுக்களுக்கு எதிராகப் போராடும் திறனைக் குறைக்கும் என எச்சரித்துள்ளார்.

மேலும், நோய் குணமடைந்த சில வருடங்களுக்குப் பிறகு மூளையைப் பாதிக்கும் ‘SSPE’ எனும் அரிய வகை உயிராபத்தான பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.