2026 October 16, Friday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கனடா தூதுவரை மலையகத்திற்கு அழைத்த மனோ!

உள்ளூர்July 24, 2026 · 3 months முன்3
கனடா தூதுவரை மலையகத்திற்கு அழைத்த மனோ!

கொழும்பு கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீட்டை போன்ற உணர்வை தருகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கனடிய உயர் ஆணையர் இஸபெல்லா மார்டின் அவர்களை கொழும்பு கனடா இல்லத்தில் சந்தித்த பின் மனோ கணேசன் இதை தெரிவித்தார். மனோ எம்பியுடன் ஜமமு சர்வதேச விவகார உப தலைவர் பாரத் அருள்சாமியும் சந்திப்பில் கலந்து கொண்டார்.

இது தொடர்பு பற்றி மனோ கணேசன் தன் எக்ஸ் தளத்தில் மேலும் கூறியுள்ளதாவது;

கனடா தூதுவருடன் நட்பு ரீதியான உரையாடல் நடைபெற்றது. இது முழுமையாக ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு அல்ல; தற்போதைய நிலைமைகளையும் எதிர்கால வாய்ப்புகளையும் குறித்து இரு நண்பர்கள் மனம் திறந்து கலந்து உரையாடிய சந்திப்பாக இருந்தது.

சமீபத்தில் கனடாவிற்கு மேற்கொண்ட எனது பயணத்தை பற்றி தூதுவர் கேடாடு அறிந்தார். அவருடன் எனது கனடா நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.

எனது பயணத்தின் போது, அமைச்சர் கரி ஆனந்தசங்கரி, நாடாளுமன்ற உறுப்பினர்

ஜுனிடா நாதன், மாநில அவை உறுப்பினர் லோகன் கணபதி உள்ளிட்ட நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், கனடா தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, மற்றும் டொரன்டோ முஸ்லிம் சங்கம், நண்பர்களை சந்தித்ததும் மகிழ்ச்சியளித்தது. உதயன் ஊடக நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டேன்.

இலங்கை–கனடா கூட்டு தயாரிப்பாக உருவாகும் “கிளிநொச்சி” என்ற மனோவிஷன் திரைப்படம் குறித்த தகவல்களையும் கனடா தூதுவருடன் பகிர்ந்து கொண்டேன்.

இறுதியாக, மலையக தமிழ் சமூகத்தின் முன் உரிமைகளையும், வாழ்வியல் தேவைகளையும் நேரில் அறிந்து கொள்ள மலையகத்திற்கு வருமாறு தூதுவரை அன்புடன் அழைத்தேன். தூதுவர் அழைப்பை ஏற்று கொண்டார்.