2026 October 14, Wednesday ⛅ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இன்று முக்கிய எதிர்பார்ப்பு!

உள்ளூர்June 30, 2026 · 4 months முன்11
பேருந்து கட்டண மாற்றம் குறித்து இன்று முக்கிய எதிர்பார்ப்பு!

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நாளை (01) முதல் அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

வருடாந்த பேருந்து கட்டண திருத்தக் கொள்கையின்படி, இம்முறை பேருந்து கட்டணம் திருத்தப்பட வேண்டிய விதம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். 

இருப்பினும், இது தொடர்பாக இதுவரை பேருந்து சங்கங்களுடன் அவர்கள் எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று பேருந்து சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. 

எவ்வாறாயினும், இம்முறை பேருந்து கட்டண திருத்தத்தில் எதிர்பார்க்கப்படும் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், நீதிமன்ற நடவடிக்கைகளை நாடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார். 

இது குறித்து ‘அத தெரண’ தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வினவியது. 

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணை ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன் பேருந்து கட்டண திருத்தம் அமுல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.