2026 October 26, Monday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

காதலன் கண்முன்னே ஆற்றில் குதித்த யுவதி மாயம்!

உள்ளூர்December 29, 2025 · 10 months முன்2
காதலன் கண்முன்னே ஆற்றில் குதித்த யுவதி மாயம்!

வென்னப்புவ, நைனாமடை பாலத்திலிருந்து யுவதியொருவர் நேற்று கிங் ஓயாவுக்குள் குதித்து நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குறித்த யுவதி தான் காதலித்த இளைஞனுக்கு தொலைபேசியெடுத்து சம்பவ இடத்துக்கு வருமாறு அழைத்ததையடுத்து, அந்த இளைஞனும் நண்பர் ஒருவருடன் பாலத்துக்கருகில் வந்தபோது யுவதி ஆற்றில் குதித்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யுவதியைக் காப்பாற்ற அவரது காதலனும் ஆற்றில் குதித்துள்ளார்.

சுற்றியிருந்தவர்கள் அந்த இளைஞனை பத்திரமாக மீட்ட போதிலும் யுவதி நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

யுவதியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.