2026 October 9, Friday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இன்று இரவு வானத்தைப் பாருங்கள் – கண்கவர் ‘பெர்சீட்’ விண்கல் மழை!

உள்ளூர்August 12, 2026 · 2 months முன்16
இன்று இரவு வானத்தைப் பாருங்கள் – கண்கவர் ‘பெர்சீட்’ விண்கல் மழை!

சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, இன்று (12) இரவு வானில் உச்சத்தை அடையவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெர்சீட் விண்கல் மழையானது, 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசித் துகள்கள் வழியாக பூமி பயணிக்கும் போது உருவாகிறது.

இந்தச் சிறிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் மிக வேகமாக நுழையும்போது, வளிமண்டலத்துடனான உராய்வினால் வெப்பமடைந்து ஒளிர்கின்றன.

இரவு வானில் காணப்படும் இந்த ஒளிரும் தடங்களே பொதுவாக ‘விண்கல் மழை’ என அழைக்கப்படுகின்றன.

இன்றைய பெர்சீட் விண்கல் மழையின் போது, வானிலை மற்றும் வானத்தை மறைக்கும் நிலைமைகள் சாதகமாக இருந்தால், ஒரு மணி நேரத்தில் 50 முதல் 100 வரையிலான விண்கற்களைக் காணக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் வானியல் பிரியர்களுக்கு இது வானில் காணக்கூடிய குறிப்பிடத்தக்க இயற்கைக் காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளி மாசு குறைந்த பகுதிகளிலிருந்து, நகர்ப்புற விளக்குகளிலிருந்து விலகி, திறந்த வானத்தை நோக்கிப் பார்ப்பதன் மூலம் இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும்.