2026 August 31, Monday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 36°
LIVE
22ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுக்கள் விசாரணைக்கு!கோதுமை மா விலை உயர்வால் பாண் விலையிலும் மாற்றம்!கடும் வறட்சி – நீர் விநியோகத்திற்கு நேரக் கட்டுப்பாடு!வாக்குமூலம் அளிக்கச் சென்ற ரவி கைது!பெட்ரோல் விலையில் ஒரே நேரத்தில் அதிரடி குறைப்பு!அர்ச்சுனாவின் எம்.பி. பதவி குறித்து சட்டத்தரணி புதிய கோரிக்கை!முச்சக்கர கட்டணத்தில் மாற்றமில்லை!ஒரே வாரத்தில் ரூ.408 மில்லியனை கடந்த வருமானம்!

அர்ச்சுனாவின் எம்.பி. பதவி குறித்து சட்டத்தரணி புதிய கோரிக்கை!

உள்ளூர்August 31, 2026 · 2 hours முன்6
அர்ச்சுனாவின் எம்.பி. பதவி குறித்து சட்டத்தரணி புதிய கோரிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். 

இம்மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே, அர்ச்சுனா எம்.பி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன இக்கோரிக்கையை முன்வைத்தார். 

எவ்வாறாயினும், இக்கோரிக்கை தொடர்பில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.