2026 October 23, Friday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கோட்டை – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் வழமைக்கு!

உள்ளூர்December 29, 2025 · 10 months முன்4
கோட்டை – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் வழமைக்கு!

புத்தளம் ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டிருந்த ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, ரயில் சேவைகள் இவ்வாறு மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாத இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, புத்தளம் ரயில் மார்க்கத்தில் குடாவெவ மற்றும் மாதம்பே ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள கடுபிட்டி ஓயா பாலத்திற்கு அருகில் ரயில் பாதை நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம், புத்தளம் இடையிலான ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தது.

இதன் விளைவாக, சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 ரயில் பெட்டிகளை போக்குவரத்துக்காகப் பயன்படுத்த முடியாமல் போனதுடன், அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாத்தாண்டியா ரயில் நிலையம் வரை மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையே நாளை காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படவுள்ள அலுவலக ரயில்கள் பின்வருமாறு,