2026 October 23, Friday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

களனி ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வருகிறது – நீர்ப்பாசனத் துறை

உள்ளூர்December 2, 2025 · 11 months முன்4
களனி ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வருகிறது – நீர்ப்பாசனத் துறை

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது.

இதன் விளைவாக, களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளைப் பாதித்த வெள்ளப்பெருக்கு நிலைமையும் குறைந்து வருகிறது.

களு கங்கை மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைந்து வருவதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

களனி கங்கையின் நாகலம் வீதியிலுள்ள நீர் அளவீட்டின் நீர்மட்டம் இன்று அதிகாலை 2 மணிக்கு 8 அடியாக காணப்பட்டது. அதிகாலை 3 மணியளவில் 7.9 அடியாக அது குறைவடைந்தது.

எவ்வாறெனினும் வெள்ள நிலைமை தொடர்ந்து நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹங்வெல்ல வெள்ள நீர்மட்டம் இன்று அதிகாலை 2 மணிக்கு 8 அடியாக இருந்ததுடன் 3 மணியளவில் 7.93 அடியாக குறைவடைந்தது.

களுகங்கையின் எல்கம நீர் அளவீட்டின் நீர்மட்டம் இன்று அதிகாலை 2 மணிக்கு 10.40 அடியாக இருந்தது. அதிகாலை 3 மணியளவில் 10.30 அடியாக குறைவடைந்துள்ளது.