2026 October 20, Tuesday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 24° ⛈️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கச்சதீவு திருவிழா ஆரம்பம்

உள்ளூர்February 28, 2026 · 8 months முன்5
கச்சதீவு திருவிழா ஆரம்பம்

கச்ச தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை தேவாலயத்தின் எதிரே உள்ள கொடிமரத்தில் அந்தோணியார் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு திருவிழா ஆரம்பமானது.

இந்த கொடியேற்ற நிகழ்வில் நெடுந்தீவு பங்குதந்தை பத்தி நாதன் கலந்துகொண்டு திருவிழா கொடியினை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜெபரத்தினம் தலைமையில் பங்குத்தந்தைகள் பிராத்தனையில் ஈடுபட்டனர்.

இம்முறை இலங்கையை சேர்ந்த 6ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கச்ச தீவுக்கு சென்றுள்ளதாகவும் , இந்தியாவில் இருந்து 3992 பக்தர்கள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.