2026 October 27, Tuesday 🌧️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மன்னார் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு

உள்ளூர்December 10, 2025 · 11 months முன்4
மன்னார் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைப்பு

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார்,உப்புக்குளம்,கொந்தைப்பிட்டி,ஜென்னத் நகர் பிரதேச மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணம் செவ்வாய்க்கிழமை (09) அன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த இம் மக்கள் தங்களது வீடுகளுக்கு குடியேறுவதற்கு முதல் தேவையாக இருந்த அத்தியாவசிய பொருட்களுடான குறித்த நிவாரணங்களே கையளிக்கப்பட்டது.

இதன் போது பிரதேசங்களின் மதஸ்தலங்களின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.

இதேவேளை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் மற்றும் அறுவை குண்டு பகுதி மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.