2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 34° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

‘லொக்கு பெட்டி’யின் 30 கோடி ரூபாய் பணம் பூசகரின் வங்கிக் கணக்கில்?

உள்ளூர்April 21, 2026 · 6 months முன்4
‘லொக்கு பெட்டி’யின் 30 கோடி ரூபாய் பணம் பூசகரின் வங்கிக் கணக்கில்?

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொக்கு பெட்டி’  என்பவரின் நிதி விவகாரங்களைக் கையாண்டதாகக் கூறப்படும், கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் குமார எனும் பூசகரின் வங்கிக் கணக்குகள் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான முறைப்பாடு இன்று (21) கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் கருத்திடுகையில், சந்தேகநபரான பூசகரின் வங்கிக் கணக்குகளில் 30 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர் ‘லொக்கு பெட்டி’ என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியுள்ளதாகவும், அவர் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தைச் சலவை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து அதன் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.