2026 October 26, Monday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 21° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஈரானிய கப்பல் விவகாரம் தீவிரம் – ஜனாதிபதி ஆலோசனை

உள்ளூர்March 6, 2026 · 8 months முன்3
ஈரானிய கப்பல் விவகாரம் தீவிரம் – ஜனாதிபதி ஆலோசனை

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அக்கப்பலில் இருந்த 208 பணியாளர்களை தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது, இலங்கையின் நிலப்பரப்பு, கடல் எல்லைகள் மற்றும் வான்பரப்பு ஆகியவற்றை எந்தவொரு அரசும் மோதல்களின் போது ஒரு தரப்பிற்கு ஆதரவாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்துவதற்கோ இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.