2026 November 9, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

விசேட whatsapp இலக்கம் அறிமுகம்

உள்ளூர்March 18, 2026 · 8 months முன்16
விசேட whatsapp இலக்கம் அறிமுகம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு , டிஜிட்டல் பொருளாதார அமைச்சு WhatsApp இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் நபர்கள், 076 000 19 19 என்ற WhatsApp இலக்கத்திற்கு வாகன இலக்கத்தை அனுப்பி வைப்பதன் மூலம் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் புகைப்படங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் என்பதுடன், வழங்கப்படக்கூடிய அனைத்துத் தகவல்களும் தனிப்பட்ட தரவுகளும் 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு அமையப் பாதுகாக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.