2026 October 11, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இந்தியா – பாகிஸ்தான் வான்பரப்புத் தடை நீடிப்பு

உலகம்April 24, 2026 · 6 months முன்3
இந்தியா – பாகிஸ்தான் வான்பரப்புத் தடை நீடிப்பு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான வான்பரப்புத் தடை உத்தரவு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த 2025 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் (Pahalgam) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பரஸ்பரம் வான்பரப்புத் தடையை விதித்திருந்தன.

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கும், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கும் இந்தத் தடை அமுல்படுத்தப்பட்டது.

தற்போது நிலவும் பாதுகாப்புச் சூழலைக் கருத்திற் கொண்டு, இந்தத் தடையை எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.