2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

உள்ளூர்April 24, 2026 · 6 months முன்1
பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுர மாவட்டத்திலும் கடுமையான மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.30 மணி வரையில் அமுலில் இருக்கும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மின்னல் தாக்கங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.