2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – VAT செலுத்த ஓகஸ்ட் 20 வரை அவகாசம்!

உள்ளூர்August 13, 2026 · 3 days முன்3
வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – VAT செலுத்த ஓகஸ்ட் 20 வரை அவகாசம்!

2026 ஜூலை மாதத்திற்கான பெறப்பட்ட பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வரி செலுத்தத் தவறுதல் அல்லது தாமதித்து செலுத்துதலுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்தத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. 

காசோலை (Cheque), வங்கி வரைவோலை (Bank draft) அல்லது கொடுப்பனவு உத்தரவு (Payment order) மூலம் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர் கிடைப்பதும் தாமதமான கொடுப்பனவாகவே கருதப்படும். 

அத்துடன், ஜூலை மாதத்திற்கான VAT அறிக்கைகளை ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். 

அந்த அறிக்கைகள் இணையவழி (Online) முறைமையின் ஊடாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, பிடித்தம் செய்யப்பட்ட வரிகளை (Withholding Tax) ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம், வரி செலுத்துவோரைக் கேட்டுக்கொள்கிறது. 

மேலும், ஜூலை மாதத்திற்குரிய சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை (SSCL) ஓகஸ்ட் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் அந்தத் திணைக்களம் நினைவூட்டுகிறது