2026 October 28, Wednesday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛈️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வைத்தியர்களின் போராட்டம் குறித்து இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

உள்ளூர்January 28, 2026 · 9 months முன்3
வைத்தியர்களின் போராட்டம் குறித்து இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பான முடிவு இன்று (28) அறிவிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இன்று நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர், எதிர்காலத் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டார். 

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகளில் இல்லாத மருந்துகளை வெளியிலுள்ள மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக துண்டுச் சீட்டுகளை விநியோகிப்பதை நிறுத்துதல் உள்ளிட்ட 05 விடயங்களை முன்நிறுத்தி, கடந்த திங்கட்கிழமை காலை முதல் அச்சங்கம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.