2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

போர் பதற்றம் தாக்கம் : உலகளவில் எரிசக்தி விலைகள் மேலும் உயர்வு!

உலகம்April 29, 2026 · 4 months முன்2
போர் பதற்றம் தாக்கம் : உலகளவில் எரிசக்தி விலைகள் மேலும் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்கள் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று மேலும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 100.3 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 111.7 அமெரிக்க டொலராக நிலவுகிறது.இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.அதன்படி, அதன் விலை 2.559 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.