2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

உள்ளூர்April 29, 2026 · 4 months முன்1
அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமனாயக்கவினால் நேற்று (28) வெளியிடப்பட்டுள்ளது.

‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பேணுதல், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லுதல் என்பவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு இந்த அவசரகால நிலை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரச திணைக்களம், உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்டுறவுச் சங்கங்களினால் வழங்கப்படும் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலையும் மீண்டும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.