2026 September 6, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

போதைப்பொருள் வியாபாரம் – தம்பதியினர் கைது

உள்ளூர்August 27, 2025 · 1 year முன்3
போதைப்பொருள் வியாபாரம் – தம்பதியினர் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என அட்டன் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி தெரிவித்தார்.

50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 50 கிராம் ஹெரோயினோடு தர்கா நகரை சேர்ந்த 25 வயது சந்தேக நபரும், அவரின் 20 வயதான கர்ப்பிணி மனைவியும் தர்கா நகரில் இருந்து நுவரெலியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள நிலையில் கினிகத்தேன, பொல்பிட்டிய – களுகல பகுதியல் உள்ள வீதி சோதனை சாவடியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுப்பு காவல் உத்தரவைப் பெற்று, இவர்களிடம் போதைப்பொருள் வாங்கும் நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.