நடைமுறைகளை மீறி ஊழியர்களை நியமித்ததாக உதேனி தசநாயக்க மீது குற்றச்சாட்டு.

இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உதேனி தசநாயக்க இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஊழியர்களைப் பணியமர்த்தியதன் மூலம் அரசுக்கு 30 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.




