2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 31° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!

இதயத்திற்கும் கால்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

ஆரோக்கியம்August 26, 2025 · 1 year முன்4
இதயத்திற்கும் கால்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

மாறிவரும் உணவு பழக்கவழக்கத்தினால் சர்க்கரைநோய்,உடல் எடை போன்ற பிரச்சினைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.இதனால் உலகளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் காணப்படுகின்றதோடு நாளுக்கு நாள் எண்னிக்கை அதிகரித்துக்கொண்ண்டே இருக்கிறது.

சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய இதய பாதிப்பு,சிறுநீரக பாதிப்பு போன்றவையும் வரும் ஆண்டு காலங்களிலும் அதிகரிக்கக்கூடும் என்கிறது ஆய்வுமுடிவு. ஆனால் இதற்க்கு மருத்துவர்கள் சொல்லும் ஒரே தீர்வு அரைமணி நேரமாவது நடை பயிற்சியில் ஈடுபடுங்கள் என்றுதான் அப்படி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் நடை பயிற்சியை பெரும்பாலானோர் முறையாக பின்பற்றுவதில்லை என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

பாதத்திற்கு எந்த வலியையும் ஏட்படுத்தாத பாதணிகளை அணிந்துக்கொள்வது,சீரான பாதையை தேர்வு செய்துக்கொள்வதோடு வாரத்தில் தொடர்ந்து ஆறு நாட்களாவது நடை பயிற்சியில் ஈடுப்பட்டால்தான் அதனின் பயனை முழுமையாக அடைய முடியும் என்கின்றனர்.

நீண்ட நாட்கள் நடக்காமல் இருப்பதனால் என்புகள் திடத்தன்மை குறைந்து பஞ்சிபோன்ற தன்மையை ஏற்படுத்துவதால் என்பு முறிவு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதய பாதிப்பு,சிறுநீரக பாதிப்பு,ரத்தஅழுத்தம்,சர்க்கரை நோய்,உடல் எடை அதிகரிப்பு,தூக்கமின்மை,மூட்டுவலி,முதுகுவலி என உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களுக்கு நடை பயிற்சியே சிறந்ததாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.