2026 October 23, Friday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 24° ⛈️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வெள்ளை சக்கரை உடலுக்கு ஆபத்தா? விளக்கம் உள்ளே…

ஆரோக்கியம்September 3, 2025 · 1 year முன்9
வெள்ளை சக்கரை உடலுக்கு ஆபத்தா? விளக்கம் உள்ளே…

பொதுவாகவே தற்காலத்தில் நாம் அதிகளவில் நுகரும் பல உணவுப்பொருட்கள் உடலில் சர்க்கரை அளவை வெகுவாக அதிகரிக்கின்றது.

சர்க்கரையை எடுத்துக் கொண்டால், அது ஒரு ‘ஸ்லோ பாய்சன்’. இந்த சர்க்கரையே உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைக்கு முக்கிய காரணம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால் சிலர் சர்க்கரை தான் பயன்படுத்த கூடாது என நினைத்து அதற்கு சிறந்த மாற்று எதுவாக இருக்கும் என்று தேடி அதை அதிகளவில் நுகர்ந்து வருகின்றார்கள்.

உதாரணத்துக்கு வெள்ளை சர்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை பயன்படுத்துவது ஆரோக்கியமானது என நினைக்கின்றார்கள்.

இது வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரை அல்லது வேறு இனிப்புகளை நுகர்வது குறித்து இதய நோய் நிபுணரான டாக்டர் அரவிந்து துருவாசல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடுத்துள்ள விளக்கம் குறித்து பார்க்கலாம்.

டாக்டர் ரவிந்து துருவாசல் குறிப்பிடுகையில், “சர்க்கரையானது நமது உடலில் ஏற்படும் பல தொற்றுநோய் அல்லாத நோய்களுக்கு மிகவும் முக்கிய காரணமாக அமைகின்றது.

உதாரணமான உடல் பருமன், சர்க்கரை நோய், ஹைப்பர் டென்சன், கொழுப்பு கல்லீரல் நோய், பிசிஓடி போன்றவை அதிக சர்க்கரை நுசர்வின் காரணமாக தோன்றுகின்றது.

இதனால் இந்த சர்க்கரையை அனைவரும் ஒரு வில்லனாக பார்க்கின்றார்கள். அத்தோடு இதற்கு மாற்றாக நாட்டுச் சர்க்கரை, வெல்லம் போன்றவை ஹீரோவாக நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இவற்றில் ஹீரோ நாட்டுச்சர்க்கரையோ அல்லது வெல்லமோ அல்ல. இதில் உண்மையான ஹீரோ ‘நோ சுகர் அல்லது லோ சுகர்” தான் என்று கூறியுள்ளார்.

லோ சுகர் என்பது சர்க்கரையாகவோ, வெல்லமாவோ அல்லது நாட்டுச்சர்க்கரையாகவோ கூட இருக்கலாம். நாம் எவ்வளவு குறைவாக எடுக்கிறோமோ, அது தான் ஆரோக்கியத்துக்கு உகந்தது என விளக்கம் கொடுத்துள்ளார்.