2026 October 18, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் மிதிகம சூட்டி

உள்ளூர்March 30, 2026 · 7 months முன்4
நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் மிதிகம சூட்டி

சர்வதேச காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த முக்கிய புள்ளியான பிரபாத் மதுசங்க எனப்படும் ‘மிதிகம சூட்டி’, இன்று அதிகாலை ஓமானிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஓமானில் தங்கியிருந்தபோது சர்வதேச காவல்துறையினரால் விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை (Red Notice) அடிப்படையில் அந்த நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளால் இவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

இவரைப் பொறுப்பேற்று இலங்கைக்கு அழைத்து வருவதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஏற்கனவே ஓமானுக்குப் பயணித்திருந்தனர்.

இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவரை, அங்கு காத்திருந்த விசேட அதிகாரிகள் குழுவினர் பொறுப்பேற்றனர்.

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள இவரிடம், அவர் மேற்கொண்ட குற்றச் செயல்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய ஏனைய கும்பல்கள் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.