2026 November 8, Sunday ⛅ கொழும்பு 24° 🌧️ யாழ்ப்பாணம் 24° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஏப்ரல் 02 முதல் ஆரம்பமாகும் அரச ஊழியர் இடமாற்றம்

உள்ளூர்March 15, 2026 · 8 months முன்5
ஏப்ரல் 02 முதல் ஆரம்பமாகும் அரச ஊழியர் இடமாற்றம்

2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரச சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 இடமாற்றங்கள் அமுலாகும் திகதி குறிப்பிடப்படாத அனைத்து இடமாற்ற உத்தரவுகளும், குறித்த திகதியிலிருந்தே நடைமுறைக்கு வர வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, 2026 வருடாந்த இடமாற்ற உத்தரவுகளைப் பெற்றுள்ள அனைத்து அதிகாரிகளும் குறித்த திகதியில் தமது புதிய சேவை நிலையங்களில் கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும் என அரச சேவை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

 மேலும், அரச சேவை ஆணைக்குழுவினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இடமாற்றங்கள் தொடர்பாக இனிவரும் காலங்களில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அல்லது பரிந்துரைகள் மீண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.