2026 October 18, Sunday ⛅ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கோட்டாபய ராஜபக்ஷ மனு: நீதிமன்றத்தில் புதிய தகவல்.

உள்ளூர்June 17, 2026 · 4 months முன்4
கோட்டாபய ராஜபக்ஷ மனு: நீதிமன்றத்தில் புதிய தகவல்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக, சட்டமா அதிபர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்மனுதாரர்களிடம் இருந்து இதுவரையில் தமக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களும் கிடைக்கப் பெறவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் தரப்பில் இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.