2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

GMOA இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம்

உள்ளூர்March 31, 2026 · 5 months முன்2
GMOA இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம்

வைத்தியர்களின் இடமாற்ற முறைகேடுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, GMOA நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் அறிவித்ததுடன், இன்று காலை 8.00 மணி முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, விசேட சிறுநீரக பிரிவுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகிய நிறுவனங்களில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டுள்ளார். 

இந்த வேலைநிறுத்தம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தாவிடின், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், வைத்தியர்களின் வேலைநிறுத்த நடவடிக்கை குறித்து அண்மையில் கருத்து வெளியிட்ட சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி பின்வருமாறு தெரிவித்தார்: 

“வைத்தியர்கள் என்ற ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குச் செல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன். அதனால் வரலாற்றில் அவ்வாறான விடயங்கள் பெரியளவில் நடந்ததும் இல்லை. குறிப்பாக இந்த தொழிற்சங்கம் அவ்வாறான காரியங்களைச் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை. கடந்த சில நாட்களாகக் கூறப்பட்ட விடயங்களில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. எவ்வாறாயினும், வைத்தியர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அதற்குச் செவிசாய்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்றார்.