2026 October 28, Wednesday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நுவரெலியாவில் உறைய வைக்கும் குளிர் நிலை

உள்ளூர்January 21, 2026 · 9 months முன்4
நுவரெலியாவில் உறைய வைக்கும் குளிர் நிலை

இன்று அதிகாலை வேளையில் நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 7.4 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை ஆய்வு மையத்தினால் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 மேலும், பண்டாரவளை பிரதேசத்தில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 11.5 பாகை செல்சியஸும், பதுளை பிரதேசத்தில் 15.2 பாகை செல்சியஸும் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 இதேவேளை, மஹஇலுப்பல்லம பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 17.4 பாகை செல்சியஸாகக் காணப்பட்டதுடன், அனுராதபுரம் பிரதேசத்தில் 18.6 பாகை செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.