2026 October 22, Thursday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா நீடிப்பு!

BREAKINGஉள்ளூர்March 2, 2026 · 8 months முன்14
இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா நீடிப்பு!

விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால், இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசா கால நீடிப்புக்காக வெளிநாட்டவர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் வலியுறுத்தியுள்ளார்.